Voter ID Awareness Program

எம்.எம்.இ.எஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேல்விஷாரம்
முதல்முறை மற்றும் இளம் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு சிறப்பு முகாம்

நேற்று 18.07.2017 அன்று எம்.எம்.இ.எஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்முறை மற்றும் இளம் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு சிறப்பு முகாம் மாலை 3.00 மணி முதல் 4.30 மணி அளவில் நடைப்பெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் திரு S.I. ராமன் தலைமை தாங்கி நடத்தினார். இவ்விழாவிற்கு வாலாஜா வருவாய் கோட்ட அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர், தலைவர் மற்றும் செயலாளர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் நிறுவனத்தார் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இக்கல்லூரியின் தாளாளர் ஹாலி ஜனாப் ஹாஜி கே.அனிஸ் அகமது அவர்கள் மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கு பொன்னாடை வழங்கி சிறப்பித்தார்கள்.

விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கல்லூரியின் முதல்வர் Y.எலிசபெத் ராணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் திரு S.I. ராமன் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார். மேலும் அவர் மாணவிகளுக்கு ஓட்டுரிமை பற்றியும், அதற்கான வயது பற்றியும், வாக்கை எவ்வாறு எங்கே சென்று பதிவு செய்வது அதன் பயன்கள் பற்றி கூறினார்.

ஓட்டு நமது பிறப்புரிமை மற்றும் அது நமது கடமை. தேசத்தை பாதுகாக்கவும் சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்கவும் பயன்படுவது ஓட்டாகும். மேலும் அவர் ஆன்லைன் மூலம் பதிவு செய்வது எப்படி என்பது குறும்படத்துடன் விளக்கி கூறினார்.

இவ்விழாவிற்கு தமிழ்த்துறைத்தலைவர் எஸ்.ரசூல் பேகம் நன்றியுரை வழங்கினார். இவ்விழா நாட்டுப்பண்ணுடன் 4.30 மணி அளவில் இனிதே நிறைவுற்றது.

commerce--1 commerce--1 commerce--1
commerce--1 commerce--1 commerce--1
commerce--1 commerce--1 commerce--1
commerce--1